ஷர்மிளா செயித் என்ற சமூகப் போராளிக்கெதிரான வன்முறைகளை எதிர்த்து பகிரங்கக் கண்டனம்
சிறகு முளைத்த பெண், உம்மத், ஒவ்வா போன்ற நூல்களின் ஆசிரியையும் பெண்ணியவாதியும் சமூகப்போராளியுமான ஷர்மிளா செயித், நிலவும் ஆணாதிக்க சமூகக் கட்டுமானத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் கலாசார, மத, பால் ரீதியான வன்முறைகளுக்கெதிராக குரல் கொடுத்து வருபவர். பாலியல் தொழில் சட்டபூர்வமாக்கப்பாடல் வேண்டுமென்று பி.பி.சிக்கு அளித்த பேட்டியின் பிற்பாடு இவர் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தொடர்ச்சியான கண்டனங்களுக்கும் கொலை மிரட்டல்களுக்கும் ஆளாகி வருகிறார். இவரது துணிச்சல்மிக்க கருத்துக்களை வன்முறையால் அடக்கிவிடலாம் என்ற நோக்கத்துடன் இணையத்தளங்களிலும் சமூக வலைப்பின்னல்களிலும் அவர் மீதான தனிப்பட்ட அவதூறுகளையும் பயமுறுத்தல்களையும் செய்து வருகின்றனர்.
மார்ச் 28 ஆம் திகதி ஏறாவூரை சேர்ந்த முஸ்லிம் பெண்ணான ஷர்மிளா செயித் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற பத்திரிகைச் செய்தியின் மூலம் இந்த பயமுறுத்தல்கள் உச்சகட்டத்தை அடைத்துள்ளன.
ஒரு பெண்ணின் சுயமான கருத்து வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்தும் இந்த ஆணாதிக்க கருத்தியளுடனான வன்முறைச் செயல்பாடுகளை இவ் இலக்கியச் சந்திப்பு கண்டிக்கிறது.
44வது இலக்கிய சந்திப்பு - ஒஸ்லோ 2014
0 comments:
கருத்துரையிடுக